தமிழகத்தில் ஆக்சிஜன் பற்றாக்குறை இல்லை- உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு விளக்கம்
தமிழகத்தில் வென்டிலேட்டர் மற்றும் ஆக்சிஜன் பற்றாக்குறை இல்லை என்று உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது.
தமிழக அரசை கேட்காமல் சென்னையில் இருந்து ஆந்திராவுக்கு ஆக்சிஜன் அனுப்பியது குறித்து ஐகோர்ட் தாமாக முன்வந்து வழக்குப்பதிந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்டது.
இந்த நிலையில் தமிழகத்தில் மருத்துவ பதற்ற நிலை எதுவும் நிலவவில்லை எனவும், தமிழகத்தில் 400 டன் ஆக்சிஜன் தயாரிக்கப்படுவதாகவும் தேவையான அளவு ஆக்சிஜன் உள்ளதாக உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
மேலும், அரசு மருத்துவமனைகளில் 31,000 ரெம்டெசிவிர் மருந்து தற்போது இருப்பு உள்ளது என தெரிவித்துள்ள தமிழக அரசு.
கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து தேர்தல் ஆணையத்திடம் கலந்து ஆலோசித்து நடவடிக்கை எடுக்குமாறு நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.