லிவ்விங் டு கெதர் ஜோடிகள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர உரிமையில்லை - சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி!
லிவிங் டுகெதர் தொடர்பான விஷயத்தில் சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியிருக்கிறது. திருமணம் செய்துக் கொள்ளாமல் இணைந்து வாழும் ஜோடிகள் குடும்ப நல நீதிமன்றங்களில் வழக்கு தொடர சட்டப்பூர்வ உரிமையில்லை என்று நீதிபதி தெளிவுபடுத்தியுள்ளார்.
கல்யாணம் செய்துக் கொள்ளாமல் ஜோசப் பேபி என்பவருடன் இணைந்து வாழ்ந்து வந்த கலைச்செல்வி என்ற பெண் வழக்கு ஒன்றை நீதிமன்றத்தில் தொடர்ந்தார். அந்த வழக்கில் நீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்திருக்கிறது. தனது இணையரான ஜோசப் பேபியுடன் தன்னை சேர்த்து வைக்கக்கோரி கலைச்செல்வி வழக்குத் தொடுத்தார்.
இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழ்ந்தவர்கள் குடும்ப நல நீதிமன்றங்களில் வழக்கு தொடர சட்டப்பூர்வ உரிமையில்லை என்று தெரிவித்துள்ளார். சட்டப்படி திருமணம் செய்து வாழ்ந்து வருபவர்கள் மட்டுமே, சட்ட உரிமைகளைப் பெறுவதற்கு குடும்பநல நீதிமன்றங்களை அணுக முடியும்.
சட்டப்படி திருமணம் செய்துக் கொள்ளாமல் இணைந்து வாழ்வது அவரவர் தனியுரிமை என்னும் பட்சத்தில், ஒன்றாக இணைந்து வாழ்ந்ததன் அடிப்படையில் மட்டுமே எப்படி நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க முடியும் என்று நீதிமன்றம் கேள்வி எழுப்பினார். எனவே, திருமணம் செய்துக் கொள்ளாமல் இணைந்து வாழும் ஜோடிகள் குடும்ப நல நீதிமன்றங்களில் வழக்கு தொடர முடியாது என்று நீதிபதி உத்தரவிட்டார்.
