ஒமைக்ரான் தொற்று பரவல் - பள்ளிகளுக்கு போடப்பட்ட முக்கிய உத்தரவு

School tamilnadu-omicron Important Order
By Nandhini Dec 03, 2021 06:07 AM GMT
Report

தென் ஆப்பிரிக்காவில் உருமாறிய கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த வைரஸிற்கு ஒமைக்ரான் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.

தற்போது இந்த வைரஸ் நாடு முழுவதும் அதிவேகமாக பரவி வருகிறது. இதனையடுத்து, ஒமைக்ரான் தொற்று பரவலை தடுக்க, பள்ளிகளுக்கு பள்ளிக்கல்வித்துறை முக்கிய உத்தரவுகளை விதித்துள்ளது.

வெளிநாடுகளிலிருந்து இந்தியா வந்த 2 பேருக்கு இத்தொற்று கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. இதனையடுத்து, தமிழக பள்ளிகளில் ஒமைக்ரான் தொற்று தடுப்பு நடவடிக்கைகளை தீவிரமாக செயல்படுத்த வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டிருக்கிறது.

இது குறித்து பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள தகவல் வருமாறு -

  • கொரோனா தொடர்பான அரசின் அனைத்து வழிகாட்டுதல்களையும் கட்டாயம் பின்பற்ற வேண்டும்.
  • 1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை சுழற்சி முறையில் மட்டுமே பாடம் நடத்த வேண்டும்.
  • பள்ளிகளில் நீச்சல் குளங்களை மூட வேண்டும்.
  • பள்ளிகளில் இறைவணக்கக் கூட்டம், விளையாட்டு, கலாச்சார நிகழ்வுகளை தவிர்க்க வேண்டும்.
  • நாட்டு நலப்பணித் திட்டம், தேசிய மாணவர் படை செயல்பாடுகளை அனுமதிக்கக் கூடாது.
  • ஆசிரியர்கள் முகக்கவசம் அணிந்து மாணவர்களுக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டும்.

இவ்வாறு பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள தகவலில் கூறப்பட்டுள்ளது. 

ஒமைக்ரான் தொற்று பரவல் - பள்ளிகளுக்கு போடப்பட்ட முக்கிய உத்தரவு | Tamilnadu Omicron School Important Order