தமிழகத்தில் அக்டோபர் 31ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு - தளர்வுகள் என்னென்ன?

lockdown extends october 31 cm announced
By Anupriyamkumaresan Sep 10, 2021 07:15 AM GMT
Anupriyamkumaresan

Anupriyamkumaresan

in தமிழ்நாடு
Report

தமிழகத்தில் மதம் மற்றும் அரசியல் சார்ந்த நிகழ்ச்சிகளுக்கு அக்டோபர் 31ம் தேதி வரை தடை அறிவிக்கப்பட்டுள்ளதுடன், ஊரடங்கு கட்டுப்பாடுகளும் தளர்வுகளுடன் அக்டோபர் 31ம் தேதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா தொற்றின் 2ம் அலை பரவல் அதிகரித்து வந்த நிலையில், மே 10ம் தேதி முதல் முழு ஊரடங்கு கட்டுப்பாடுகளை முதல்வர் முக ஸ்டாலின் அறிவித்தார். பின்னர், பாதிப்பு குறைந்து வந்ததை அடுத்து படிப்படியாக ஊரடங்கு கட்டுப்பாடுகளில் தளர்வுகள் அளிக்கப்பட்டது.

தமிழகத்தில் அக்டோபர் 31ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு - தளர்வுகள் என்னென்ன? | Tamilnadu October 31St Lockdown Extends Cmannounce

இறுதியாக செப்டம்பர் 15ம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளதாக அரசு அறிவித்தது. தற்போது மேலும், கொரோனா பாதிப்பு மெல்ல அதிகரித்து வருவதாலும், அடுத்தடுத்து பண்டிகைகள் வர இருப்பதாலும் தமிழகத்தில் அக்டோபர் 31ம் தேதி வரை முன்னர் இருந்த தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக முதல்வர் முக ஸ்டாலின் இன்று செப்டம்பர் 9-ம் தேதி அறிவித்துள்ளார்.

மேலும், மாநிலம் முழுவதும் பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டிய கட்டுப்பாடுகள் குறித்தும் அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன்படி, முதல்வரின் அறிவிப்பில், கொரோனா நோய்த் தொற்றின் மூன்றாவது அலையின் தாக்கம் தமிழ்நாட்டில் ஏற்படுவதை தடுக்கும் பொருட்டும், அண்டை மாநிலமான கேரளாவில் அதிகரித்து வரும் கொரோனா மட்டுமின்றி நிபா வைரஸ் நோயின் தாக்கம் கண்டறியப்பட்டுள்ளதை கருத்தில் கொண்டும் தடை நீட்டிக்கப்படுகிறது.

தமிழகத்தில் அக்டோபர் 31ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு - தளர்வுகள் என்னென்ன? | Tamilnadu October 31St Lockdown Extends Cmannounce

பொதுமக்கள் பண்டிகைகளை தங்கள் இல்லங்களிலேயே கொண்டாட வேண்டும். கூட்டம் கூடும் இடங்களுக்கோ, நிகழ்வுகளுக்கோ செல்வதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் கொரோனா 3வது அலை வருவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகரித்துள்ளதாக மத்திய அரசின் சிறப்புக் குழு அறிக்கை அளித்துள்ளது.

திருவிழா, அரசியல் சமூகம் மற்றும் மதம் சார்ந்த நிகழ்ச்சிகள் நடத்துவற்கு அக்டோபர் மாதம் 31 ம் தேதி வரையில் தடை உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. பள்ளி கல்லூரி வளாகங்களில் நோய் பரவல் தடுப்பு நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.