புத்தாண்டையொட்டி சென்னையில் புதிய கட்டுப்பாடு - தமிழக அரசு அறிக்கை

newyear tamilnadu control
By Nandhini Dec 30, 2021 03:41 AM GMT
Report

சென்னையில் டிசம்பர் 31ம் தேதி நள்ளிரவு 12 மணி முதல் ஜனவரி 1ம் தேதி அதிகாலை 5 மணி வரை அத்தியாவசிய வாகனங்களை தவிர மற்ற வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தமிழக அரசு வெளியிடப்பட்டுள்ள அறிக்கை வருமாறு -

தற்போதுள்ள சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டு, மேலும் கலந்து ஆலோசனை செய்யப்பட்டு சென்னை பெருநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் வருகின்ற 31.12.2021 அன்று இரவு 12.00 மணிக்கு மேல் அத்தியாவசிய தேவைகள் தொடர்பான வாகன போக்குவரத்தை தவிர, மற்ற வாகன போக்குவரத்திற்கு 01.01.2022 அன்று காலை 05.00 மணி வரை அனுமதி இல்லை. எனவே பொதுமக்கள் அனைவரும் மேலே குறிப்பிட்ட 31.12.2021 இரவு 12.00 மணிக்கு முன்பு தங்கள் பயணங்களை அன்று முடித்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 

புத்தாண்டையொட்டி சென்னையில் புதிய கட்டுப்பாடு - தமிழக அரசு அறிக்கை | Tamilnadu Newyear Control