தமிழகத்தின் புதிய தலைமைச் செயலாளராக இறையன்பு ஐஏஎஸ் நியமனம்
தமிழகத்தின் புதிய தலைமைச் செயலாளர் இறையன்பு நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
தமிழக தலைமை செயலாளராக இருந்த சண்முகம், கடந்த ஜனவரி மாதம் பணியில் இருந்து ஓய்வு பெற்றார். இவரையடுத்து, ராஜீவ் ரஞ்சன் தலைமை செயலாளராக நியமிக்கப்பட்டார். அவர் நியமிக்கப்பட்டு 3 மாதங்களே ஆகும் நிலையில், தற்போது தமிழகத்தின் புதிய தலைமை செயலாளராக இறையன்பு ஐஏஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழகத்தில் ஆட்சி அமைந்திருப்பதால், தலைமை செயலாளர் மாற்றம் செய்யப்பட்டுள்ளார். காஞ்சிபுரம் ஆட்சியர், சுற்றுலாத் துறை செயலாளர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளை வகித்த இறையன்பு, கூடுதல் தலைமை செயலாளராக பொறுப்பு வகித்தவர்.
நாகை சார் ஆட்சியராக பணியைத் தொடங்கிய இவர், பல புத்தகங்களையும் எழுதியுள்ளார்.
புதிய தலைமை செயலாளராக இறையன்பு நியமிக்கப்பட்டிருப்பதால், ராஜீவ் ரஞ்சன் தமிழ்நாடு செய்தித்தாள் நிறுவனத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.