மே 10ம் தேதி முதல் தமிழகத்தில் முழு ஊரடங்கா?...வெளியான அதிர்ச்சி தகவல்

lockdown tamilnadu may10 full time
By Praveen May 07, 2021 11:53 PM GMT
Report

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகமாக உள்ள காரணத்தினால் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து நேற்று அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் முக ஸ்டாலின் ஆலோசனை கூட்டம் நடத்தினார்.

தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் காட்டுத்தீ போல மிகவும் வேகமாக பரவி வருகிறது. கொரோனாவை தடுக்க அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. ஏப்ரல் 20 ஆம் தேதி முதல் இரவு ஊரடங்கு வார இறுதி நாள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இருந்த போதிலும் 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பு 24 ஆயிரத்திற்கு அதிகமாக உள்ளது.

இதனால் நேற்று புதிதாக பதவி ஏற்ற தமிழகத்தின் முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் கொரோனா கட்டுப்பாடுகள் குறித்தும், முழு ஊரடங்கு அமல்படுத்துவது அவசியமா என்பது குறித்தும் இன்று அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

இந்த கூட்டத்தில் கொரோனா கட்டுப்பாடுகள் கவனிக்க நியமனம் செய்யப்பட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர். நேற்று நடைபெற்ற கூட்டத்தின் முடிவில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் கடுமையாக்குவது குறித்தும், முழு ஊரடங்கு தேவையா இல்லையா என்பது குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டதாக தகவல் வெளிவந்துள்ளது.

மேலும் கட்டுப்பாடுகள் குறித்த முக்கிய முடிவுகள் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் வருகிற மே 10ம் தேதி முதல் தமிழகத்தில் முழு ஊரடங்குக்கு வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அண்ணல் இது குறித்து அதிகார பூர்வமான தகவல் இன்னும் எதுவும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.