தமிழகமா - தமிழ்நாடா? ஆளுநரின் சர்ச்சை பேச்சுக்கு வலுக்கும் எதிர்ப்புகள்
ராஜ்பவனில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி இந்தியாவில் ஆங்கிலேயர்கள் காலத்தில் மாநிலங்கள் உருவாக்கப்பட்டதால் பாரதத்தின் பகுதியை தமிழ்நாடு என அழைப்பதற்கு பதிலாக தமிழகம் என அழைப்பதே சரியென தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அண்மையில் தெரிவித்த கருத்து பெரும் சர்சையாகியுள்ளது.
கட்சி தலைவர்கள் கண்டனம்
இந்நிலையில் அவரது இந்த கருத்துக்கு தமிழக கட்சி தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. ஆளுநரின் இந்தக் கருத்தைக் கண்டித்துள்ள திமுக மூத்த தலைவர் டி.ஆர்.பாலு தமிழ்நாட்டில் பிரிவினையையும், குழப்பத்தையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தும் நோக்கத்துடன் தினசரி ஆளுநர் சர்ச்சைக்குரிய கருத்துகளை வெளியிடுவதாக கண்டனம் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் தற்போது மதிமுகவில் இருந்து வைகோவும் கடுமையான விமர்சனத்தை வெளியிட்டுள்ளார்.
இதை தொடர்ந்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் இது தமிழ்நாடு இஷ்டம் என்றால் இரு...இல்லாட்டி ஓடு என ஆளுநரை விமர்ச்சித்துள்ளார்.
Bigg Boss: உங்க வீட்டுல இப்படியா வளர்த்திருப்பான் உன்னையெல்லாம்? தரையில் அமர்ந்து வெடித்த விஜய் சேதுபதி Manithan