Friday, Jul 25, 2025

வரும் 12ம் தேதி பிரதமர் மோடி தமிழகம் வருவது உறுதி - விதிமுறைகள் படி நிகழ்ச்சி நடைபெறும் - சி.டி.ரவி

tamilnadu modi visit
By Nandhini 4 years ago
Report

வரும் 12ம் தேதி இந்திய பிரதமர் மோடி தமிழகம் வருகை தர இருக்கிறார். ஒமைக்ரான் கட்டுப்பாடு விதிமுறைகளை பின்பற்றி நிகழ்ச்சிகள் நடைபெறும் என்று பாஜக தேசிய பொதுச் செயலாளர் சி.டி.ரவி தெரிவித்துள்ளார்.

பாஜக தேசிய பொதுச் செயலாளர் சி.டி.ரவி டெல்லியிலிருந்து விமானம் மூலம் மதுரை விமான நிலையம் வந்தடைந்தார்.

அப்போது அவர் செய்தியாளர்களை சந்தித்தபோது கூறுகையில், வரும் 12ம் தேதி பிரதமர் மோடியின் தமிழக வருகை உறுதியாக உள்ளது. ஒமைக்ரான் மற்றும் கொரோனா வைரஸ் கட்டுப்பாடுகளை பின்பற்றி நிகழ்ச்சிகள் நடைபெறும். அதற்கான ஏற்பாடுகளை செய்து கொண்டிருக்கிறோம் என்றார். 

வரும் 12ம் தேதி பிரதமர் மோடி தமிழகம் வருவது உறுதி - விதிமுறைகள் படி நிகழ்ச்சி நடைபெறும் - சி.டி.ரவி | Tamilnadu Modi Visit