தமிழகத்தில் கனமழை - தமிழக முதலமைச்சருக்கு போன் செய்த பிரதமர் மோடி

tamilnadu-modi-stalin
By Nandhini Nov 08, 2021 04:13 AM GMT
Report

சென்னை மற்றும் தமிழகத்தில் பெய்து வரும் கனமழை குறித்து பிரதமர் மோடி செல்போனில் தொடர்பு கொண்டு தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினிடம் விவரம் கேட்டறிந்தார்.

தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை தீவிரமடைந்து வருகிறது. சென்னை மற்றும் தமிழகம் முழுவதும் கனமழை பெய்ய துவங்கி இருக்கிறது. இந்நிலையில், சென்னையில் பல்வேறு தாழ்வான பகுதிகளில் மழை நீர் வெள்ளம் சூழ்ந்திருக்கிறது. கடந்த 2015ம் ஆண்டிற்கு பின் சென்னையில் கன மழை பெய்துள்ளது.

இந்நிலையில், பிரதமர் மோடி, தமிழக முதலமைச்சர் ஸ்டாலினை செல்போனில் தொடர்பு கொண்டு மழை விபரங்கள் கு்றித்து கேட்டறிந்தார். அப்போது மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் மத்திய அரசு உறுதுணையாக இருக்கும் என்று உறுதி அளித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

இது தொடர்பாக பிரதமர் தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவினை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், தமிழக மக்களின் நலன், பாதுகாப்பு குறித்து பிரார்த்தனை செய்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.