விரைவில் மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு கடன் தள்ளுபடிக்கான ரசீதுகள் வழங்கப்படும் - அமைச்சர் பெரியசாமி

tamilnadu அமைச்சர் minister-periyasamy debt-waiver Receipt பெரியசாமி மகளிர்சுயஉதவி கடன்தள்ளுபடி
By Nandhini Mar 30, 2022 11:52 AM GMT
Report

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான பிரச்சாரத்தின்போது தி.மு.க ஆட்சிக்கு வந்தால் நகைக்கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என கூறப்பட்டது.

இதனையடுத்து, ஆட்சிக்கு வந்தவுடன் நகைக்கடன் தள்ளுபடிக்கான அறிவிப்பு வெளியானது. மேலும் அ.தி.மு.க கூட்டுறவு வங்கியில் முறைகேடுகளில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

கூட்டுறவு வங்கியில் நகைக்கடன்கள் பெறுவதற்குத் தகுதியானவர்கள் குறித்த விவரங்களைத் தமிழ்நாடு அரசு சேகரித்தது. இந்நிலையில், மார்ச் 31ம் தேதிக்குள் 14.40 லட்சம் பேருக்கு நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ. பெரியசாமி தெரிவித்திருந்தார்.

இது குறித்து அமைச்சர் ஐ.பெரியசாமி, “மார்ச் 31ம் தேதிக்குள் தமிழகத்திலுள்ள 14 லட்சத்து 40 ஆயிரம் பேருக்கு 6 ஆயிரம் கோடி ரூபாய் பொது நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும். தள்ளுபடி சான்றிதழ், 5 சவரன் நகை திருப்பித் தரப்படும். விடுபட்ட தகுதியான நபர்கள் விண்ணப்பித்தால் நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும். முறைகேடாக நகை பெற்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவித்திருந்தார்.

இன்று சென்னை, பிராட்வே மத்தியக் கூட்டுறவு வங்கியில், நகைக்கடன் தள்ளுப்படிக்கான சான்றிதழ்களை அமைச்சர்கள் சேகர்பாபு, பெரியசாமி ஆகியோர் வழங்கினார்கள்.

இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த கூட்டுறவுத் துறை அமைச்சர் பெரியசாமி கூறுகையில், மகளிர் சுய உதவிக் குழுக்களின் கடன் தள்ளுபடிக்கான ரசீதுகள் விரைவில் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.   

விரைவில் மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு கடன் தள்ளுபடிக்கான ரசீதுகள் வழங்கப்படும்  - அமைச்சர் பெரியசாமி | Tamilnadu Minister Periyasamy Debt Waiver Receipt