நாளை முதல் தமிழகத்தில் பால் தட்டுப்பாடு : அதிர்ச்சியில் பொதுமக்கள்
தமிழகத்தில் பால் உற்பத்தியாளர்கள் , விலையினை உயர்த்த கோரி பால் விநியோகத்தை நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழகத்தில் உள்ள பால் உறபத்தி நிறுவனமான ஆவின் விவாசாயிகளிடமிருந்து பாலினை வாங்கி கொள்முதல் செய்து ஆவின் நிறுவனம் மூலமாக பொதுமக்களுக்கு வழங்கி வருகின்றது.
பேச்சு வார்த்தை
இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக பால் விலை தங்களுக்கு போதுமானதகா இல்லை என பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தினர் தொடர் கோரிக்கையினை வைத்து வந்தனர். இந்த நிலையில் நேற்று பால் வளத்துறை அமைச்சருடன் பேச்சு வார்த்தை நடத்தினர்.
பால் நிறுத்தம்
அப்போது கூட்டுறவு சங்கத்தின் கோரிக்கையினை அரசு ஏற்கவில்லை என்று கூறப்படுகின்றது ,அதன் படி இன்று முதல் பால் விநியோகத்தை நிறுத்தி பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தினர் போராட்டத்தை தொடங்கியுள்ளனர். இன்று விநியோகப்பட வேண்டிய பால் நேற்று கொள்முதல் செய்யப்பட்டிருக்கும் ஆதலால், நாளை முதல் தமிழகத்தில் பால் விநியோகம் பாதிக்கப்படும் என தெரிகிறது.
இந்த நிலையில் ஈரோடு அடுத்த நசியனூரில், பால் கொள்முதல் விலையை உயர்த்தக் கோரி, பால் உற்பத்தியாளர்கள் நல சங்கத்தினர் சாலை மறியல்; கறவை மாடுகளுடன் வந்து சாலையில் பாலைக் கொட்டியதால் பரபரப்பு நிலவி வருகின்றது.