சுட்டெரிக்கும் வெயில், குறைய வாய்ப்பு? - வானிலை ஆய்வு மைய இயக்குனர் விளக்கம்!

Tamil nadu Regional Meteorological Centre Heat wave
By Vinothini Jun 06, 2023 07:58 AM GMT
Report

தற்போது தமிழகத்தில் வெயில் குறைய வாய்ப்பு குறித்து வானிலை ஆய்வு மைய இயக்குனர் விளக்கம் அளித்துள்ளார்.

வெயில்

தமிழகத்தில் தற்பொழுது வெயில் தாக்கம் அதிகமாக உள்ள நிலையில், இவை குறைய வாய்ப்பு இல்லை என இந்திய ஆய்வு மையத்தின் தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

tamilnadu-meteorology-says-about-heat

இதனை குறித்து அவர் விளக்கம் அளித்துள்ளார், அதில் அவர், தற்போது வறண்ட மேற்கு திசை காற்று வீசி வருவதால் வெப்பம் அதிகமாக இருப்பதாக கூறியுள்ளார்.

மேலும் இது குறைய வாய்ப்பே இல்லை என்றும் கூறினார்.

விளக்கம்

இதனை தொடர்ந்து, அவர் பேசுகையில், கடந்த காலங்களிலும் ஜூன் மாதத்தில் 104 டிகிரி பாரன்ஹீட்டுக்கு மேல் வெப்பம் பதிவாகி இருந்ததாகவும்,

குறிப்பாக 2019-ல் 14 நாட்கள் 104 டிகிரி பாரன்ஹீட்டுக்கு மேல் வெப்பம் பதிவானதாகவும் பாலச்சந்திரன் கூறினார்.

tamilnadu-meteorology-says-about-heat

இரண்டு நாட்களுக்கு பின்னர் காற்றின் திசை மாறுபாடு காரணமாக வெப்பநிலை குறைய வாய்ப்பு உள்ளதாக கூறினார்.

மேலும், அரபிக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாக வாய்ப்பு இருப்பதாகவும் கூறினார்.