‘தனிப்பட்ட முறையிலும் அவரை நான் நன்கு அறிவேன்...’ - நடிகர் ஸ்ரீகாந்த் மறைவிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
நடிகர் ஸ்ரீகாந்த் மறைவுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். நடிகர் ஸ்ரீகாந்த் வயது முதிர்வு (82) காரணமாக நேற்று காலமானார். இவரது மறைவுக்கு திரையுலகினர் பலர் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.
அந்த வகையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடிகர் ஸ்ரீகாந்த் மறைவிற்கு இரங்கல் தெரிவித்திருக்கிறார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி வருமாறு -
பழம்பெரும் நடிகர் ஸ்ரீகாந்த் அவர்கள் உடல்நலக்குறைவால் மறைந்தார் என்ற செய்தி கேட்டு மிகவும் வருந்துகிறேன். இயக்குநர் ஸ்ரீதர் அவர்களால் திரையுலகில் அறிமுசுமாகி பைரவி தங்கப்பதக்கம் உள்ளிட்ட மறக்கமுடியாத பல திரைப்படங்களில் ஸ்ரீகாந்த் அவர்கள் நடித்துள்ளார்.
கதாநாயகனாக மட்டுமின்றி அனைத்து வகையான பாத்திரங்களிலும் தேர்ந்த நடிப்பை வெளிப்படுத்தும் கலைஞராக அவர் திகழ்ந்துள்ளார், எங்கள் இல்லத்தின் அருகே வசித்தவர் என்பதால் தனிப்பட்ட முறையிலும் அவரை நான் நன்கு அறிவேன்.
பலமுறை அவரை நேரில் சந்திக்கும் வாய்ப்பினையும் பெற்றுள்ளேன், திரு ஸ்ரீகாந்த் அவர்களை இழந்து தவிக்கும் அவர்தம் குடும்பத்திளருக்கும் தமிழ்த் திரையுலகினருக்கும் எனது ஆழ்ந்த இரங்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Rasipalan: இன்னும் 2 நாட்களில் நடக்கும் சனி பெயர்ச்சி- துரதிஷ்ட வலையில் சிக்கப்போகும் ராசிகள் Manithan
