‘தினமலர்’ஸ்ரீமதி செல்லம்மாள் மறைவுக்கு எடப்பாடி பழனிச்சாமி இரங்கல்!
tamilnadu-message-of-condolence
By Nandhini
‘தினமலர்’ஸ்ரீமதி செல்லம்மாள் மறைவிற்கு முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இரங்கல் தெரிவித்திருக்கிறார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது -
தினமலர் நிறுவனர் டி.வி.ராமசுப்பையர், கிருஷ்ணம்மாள் தம்பதியின் மூத்த மகளும், மதுரை KSA.கிருஷ்ணமூர்த்தி அவர்களின் மனைவியுமான ஸ்ரீமதி செல்லம்மாள் அவர்கள் காலமானார் என்ற செய்தியறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன். ஸ்ரீமதி செல்லம்மாள் அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக் கொள்வதுடன் அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.
இவ்வாறு அந்த இரங்கல் செய்தியில் கூறியுள்ளார்.