ஹெலிகாப்டர் விபத்து குறித்து அவதூறு வழக்கு - யூடியூபர் மாரிதாஸ் நீதிமன்றத்தில் ஆஜர்
ராணுவ ஹெலிகாப்டர் விபத்து குறித்து அவதூறு பரப்பிய வழக்கில், சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து யூடியூபர் மாரிதாஸை கைது செய்தது.இந்நிலையில், நீதிமன்றத்தில் மாரிதாஸ் ஆஜர்படுத்தப்பட்டார்.
ஹெலிகாப்டர் விபத்து குறித்து அவதூறு பரப்பிய வழக்கில் கடந்த 9ம் தேதி யூடியூபர் மாரிதாஸை, அவரது வீட்டில் போலீசார் கைது செய்தார்கள். கைது செய்யப்பட்ட யூடியூபர் மாரிதாஸ் தேனி சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், யூடியூபர் மாரிதாஸை மற்றொரு வழக்கில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸ் கைது செய்தனர்.
போலி இமெயில் மூலம் யூடியூபில் அவதூறு கருத்துக்களை பரப்பியதாக 2020-ல் பதியப்பட்ட வழக்கில் மாரிதாஸ் மீண்டும் கைது செய்யப்பட்டார். தனியார் தொலைக்காட்சி நிர்வாகம் அளித்த புகாரின் பேரில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் நடவடிக்கை மேற்கொண்டனர்.
இந்நிலையில், தனியார் தொலைக்காட்சி குறித்து அவதூறு பரப்பும் வகையில் சமூக வலைத்தளத்தில் பதிவிட்ட யூடியூபர் மாரிதாஸ் எழும்பூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் முன்பு ஆஜர்ப்படுத்தப்பட்டார்.