ஒமைக்ரான் வைரஸ் - ஊரடங்கு நீட்டிக்கப்படுமா? மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை

tamilnadu-m-k-stalin-consultation
By Nandhini Dec 13, 2021 06:51 AM GMT
Report

தமிழகத்தில் ஊரடங்கை நீட்டிப்பது குறித்தும், கூடுதல் கட்டுப்பாடுகள் விதிப்பது குறித்தும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தற்போது ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.

சில மாதங்களாக கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. இந்நிலையில், தென் ஆப்பிரிக்காவில் ஒமைக்ரான் என்னும் உருமாறிய கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த ஒமிக்ரான் வைரஸ் தொற்று இதுவரை 50 நாடுகளுக்கு அதிவேகமாக பரவி வருகிறது. இதனையடுத்து, ஒமைக்ரான் பரவுவதை தீவிரமாக தடுக்க, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்று அனைத்து மாநிலங்களும் மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது. இந்நிலையில், மகாராஷ்டிரா, கர்நாடகா, ஆந்திரா, டெல்லி, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் ஒமைக்ரான் தொற்று பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து, தமிழகத்தில் அமல்படுத்தப்பட்டுள்ள தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு கட்டுப்பாடுகள் டிசம்பர் 15ம் தேதியுடன் முடிவடைகிறது. இந்நிலையில், ஊரடங்கு கட்டுப்பாடுகளை நீட்டிப்பது குறித்து, தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் தற்போது ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருகிறது. அண்டை மாநிலங்களான கர்நாடகா, ஆந்திரா,கேரளா போன்ற மாநிலங்களில் ஒமிக்ரான் தொற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தமிழக எல்லைகளில் தீவிர சோதனை, தடுப்பூசி செலுத்தும் பணிகள் அதிகரிப்பு, கொரோனா பரவல் கட்டுப்பாடுகள் போன்றவை குறித்து ஆலோசனை நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சென்னை தலைமைச்செயலகத்தில் நடைபெற்று வரும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அமைச்சர் சேகர்பாபு, காவல்துறை, தலைமைச் செயலாளர், மருத்துவத்துறைச் செயலாளர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் கலந்து கொண்டுள்ளனர்.