தமிழகத்தில் நேற்று மட்டும் 6,296 வாகனங்கள் மூலம் காய்கறி விற்பனை..!
சென்னையில் நேற்று மட்டும் 1,670 வாகனங்களில் 1,400 மெட்ரிக் டன் காய்கறிகள் விற்பனை செய்யப்பட்டது என சென்னை மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார்.
சென்னையில் இன்று முதல்வர், வேளாண்மைத்துறை, சென்னை மாநகராட்சி ஆணையர்கள் ஆய்வு மேற்கொண்டனர். நேற்று முதல் தளர்வற்ற முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், பொதுமக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் விநியோகம் தொடர்பாக ஆய்வு மேற்கொண்டனர்.
இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய, சென்னை மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங் பேடி, நேற்று மட்டும் சென்னையில் 1,670 வாகனங்கள் மூலம் 1,400 மெட்ரின் டன் காய்கறி, பழங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும், மற்ற மாவட்டங்களில் 4,626 வாகனங்களில் காய்கறிகள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாகவும், மொத்தமாக 6,296 வாகனங்கள் மூலம் தமிழகம் முழுவதும் பொதுமக்களுக்கு காய்கறிகள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.