கூடுதல் தளர்வுகள் - என்னென்ன தெரியுமா? கடை திறப்பு நேரம் நீட்டிப்பு
தமிழகத்தில் கூடுதல் தளர்வுகளாக இன்று முதல் தியேட்டர்கள் திறக்கப்படுகின்றன. தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கடந்த மே மாதம் முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது.
தற்போது கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து வருவதால், ஊரடங்கில் சில தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று முதல் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி 50 விழுக்காடு பார்வையாளர்களுடன் திரையரங்குகள் திறக்கப்படுகின்றன.
இதில் திரையரங்க பணியாளர்கள் அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட்டிருப்பதை உரிமையாளர்கள் உறுதி செய்ய வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
மேலும், உயிரியல் பூங்கா வழிகாட்டு நெறிமுறைகளுடன் திறக்கப்படுகிறது. கடற்கரையில் பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அனைத்து கடைகளும் இனி இரவு 10 மணி வரை செயல்படலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.