தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை வரும் 28ஆம் தேதி வரை நீடித்து உத்தரவிட்டது தமிழக அரசு
சென்னை,திருவள்ளூர்,செங்கல்பட்டு,காஞ்சிபுரம் மாவட்டங்களுக்கிடையே பொது போக்குவரத்திற்கு 50% இருக்கைகளுடன் பேருந்துகளை இயக்க அனுமதியளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.மேலும் அரசு அலுவலகங்கள் 100 சதவீத பணியாளர்களுடன் இயங்க அனுமதியளிக்கபட்டுள்ளது.
உணவகங்கள்,பேக்கரியில் பார்சல் வேவைகளுக்கு மட்டுமே அனுமதி. சென்னை,திருவள்ளூர்,செங்கல்பட்டு,காஞ்சிபுரம் மாவட்டங்களுக்கிடையே 50 சதவீத இருக்கையுடன் பேருந்து போக்குவரத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. காய்கறி கடை, மளிகை, இறைச்சி உள்ளிட்ட கடைகள் 7 மணி வரை செயல் படலாம். மூன்று வகைகளாக மாவட்டங்கள் பிரித்து தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல் ஆகிய 11 மாவட்டங்களுக்கு கூடுதல் தளர்வுகள் இல்லை. பேருந்து போக்குவரத்திற்கும் அனுமதி இல்லை
வாடகை வாகனங்கள், டாக்சி, ஆட்டோக்களில் இ-பதிவு இன்றி செல்ல அனுமதி
வாடகை டாக்சிக்களில் ஓட்டுநர் தவிர 3 பேர் பயணம் செய்யலாம்
ஆட்டோக்களில் ஓட்டுநர் தவிர 2 பேர் மட்டும் பயணிக்க அனுமதி