‘அனைவரும் ஜனநாயக கடமையை ஆற்ற வேண்டும்..’ - குஷ்பூ பேட்டி
பாஜக நிர்வாகியும், நடிகையுமான குஷ்பு, சென்னை-மந்தைவெளி வார்டு எண் 126ல் உள்ள தனியார் பள்ளியில் தனது வாக்கை செலுத்தினார்.
தமிழ்நாட்டில் நகராட்சிகள், பேரூராட்சிகள் உள்ளிட்ட 648 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வருகிறது.
இந்த வாக்குப்பதிவு காலை 7 மணி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. பொதுமக்களும், அரசியல் தலைவர்களும், பிரபலங்களும் ஆர்வத்துடன் வாக்களித்து வருகிறார்கள்.
அம்பாவிதம் எதுவும் நடைபெறாமல் இருக்க கண்காணிப்பு கேமராக்கள் வாக்கு செலுத்தும் அறையில் பொருத்தப்பட்டுள்ளது. மேலும், வாக்குப்பதிவு நடைபெறும் அனைத்து இடங்களிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இந்நிலையில், பாஜக நிர்வாகியும் நடிகையுமான குஷ்பு சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட மந்தைவெளி வார்டு எண் 126ல் உள்ள தனியார் பள்ளியில் தனது வாக்கை செலுத்தினார்.
இது குறித்து அவர் பேசுகையில், அனைவரும் வாக்களித்து தங்களது ஜனநாயக கடமையை ஆற்ற வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.