Saturday, Jan 18, 2025

சிறப்பு ஏற்பாடு செய்து தரவில்லை - தேர்தலை புறக்கணித்த மாற்றுத்திறனாளி

elections tamilnadu local-and-municipal மாற்றுத்திறனாளி தேர்தல் புறக்கணிப்பு
By Nandhini 3 years ago
Report

தமிழகத்தில் சென்னை உள்பட 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகளில் என மொத்தம் 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பதவிகளுக்கு ஒரே கட்டமாக வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.

தமிழகத்தில் இன்று காலை 7 மணிக்கு முதல் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இதில் பொதுமக்களும், அரசியல் தலைவர்களும், பிரபலங்களும் காலை முதல் ஆர்வமாக வாக்களித்து வருகின்றனர்.

சென்னை, எண்ணூரில் பார்வையற்றோருக்கு சிறப்பு ஏற்பாடு செய்து தரவில்லை என்று கூறி அரங்க ராஜா என்ற மாற்றுத்திறனாளி புகார் தெரிவித்து, இத்தேர்தலை புறக்கணித்துள்ளார். 

சிறப்பு ஏற்பாடு செய்து தரவில்லை - தேர்தலை புறக்கணித்த மாற்றுத்திறனாளி | Tamilnadu Local And Municipal Elections