முதல்முறையாக ஆவடி மாநகராட்சியில் நரிக்குறவ இன இளைஞர்கள் வாக்களித்தனர்
elections
tamilnadu
local-and-municipal
நரிக்குறவர்கள்
இளைஞர்கள்
வாக்களிப்பு
By Nandhini
தமிழகத்தில் சென்னை உள்பட 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகளில் என மொத்தம் 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பதவிகளுக்கு ஒரே கட்டமாக வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.
தமிழகத்தில் இன்று காலை 7 மணிக்கு முதல் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இதில் பொதுமக்களும், அரசியல் தலைவர்களும், பிரபலங்களும் காலை முதல் ஆர்வமாக வாக்களித்து வருகின்றனர்.
இந்நிலையில், ஆவடி மாநகராட்சியில் முதன்முறையாக நரிக்குறவ இன இளைஞர்கள் வாக்கு செலுத்தி வருகின்றனர்.
இன்று மாலை 5 மணியோடு இத்தேர்தல் நிறைவடைய உள்ளது. அதோடு 5 மணி முதல் 6 வரை கொரோனா பாதித்த நோயாளிகள் வாக்குப்பதிவு செய்ய உள்ளனர்.