பயணிகள் அனுமதியுடன் பஸ்ஸை நிறுத்திவிட்டு ஓட்டுப்போட்ட டிரைவர் - வைரலாகும் வீடியோ
தமிழகத்தில் சென்னை உள்பட 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகளில் என மொத்தம் 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பதவிகளுக்கு ஒரே கட்டமாக வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.
தமிழகத்தில் இன்று காலை 7 மணிக்கு முதல் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.
இதில் பொதுமக்களும், அரசியல் தலைவர்களும், பிரபலங்களும் காலை முதல் ஆர்வமாக வாக்களித்து வருகின்றனர்.
அசம்பாவிதங்கள் நடைபெறாத வண்ணம், அனைத்து வார்டுகளில் கண்காணிப்பு கேமராக்களும், போலீசாரும் குவிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், தர்மபுரியில் பஸ் டிரைவர் ஒருவர் தன்னுடைய ஜனநாயக கடமையாற்ற, பயணிகளிடம் ஓட்டு போடுவதற்கு அனுமதி கேட்டுள்ளார். பயணிகளும் அவர் ஓட்டுபோட அனுமதி கொடுத்ததால், அவர் பஸ்ஸை நிறுத்திவிட்டு வாக்குச்சாவடிக்கு சென்று தன்னுடைய வாக்கை பதிவு செய்து வந்துள்ளார்.
மிகவும் உற்சாகமாக திரும்பி வந்த அவர், பஸ்ஸை எடுத்து மீண்டும் இயக்கத் தொடங்கினார். தற்போது இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.