கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட்ட 94 வயது பாட்டி வாக்களித்தார்
tamilnadu
voted
grand mother
local-and-municipal-elections
94 year old
By Nandhini
தமிழ்நாட்டில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 490 பேரூராட்சிகளில் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.
இன்று காலை 7 மணி முதலே தொடங்கப்பட்ட வாக்குப்பதிவில் மக்கள் அனைவரும் ஆர்வத்துடன் வந்து வாக்கு செலுத்தி வருகின்றனர்.
அரசியல் கட்சி தலைவர்கள், சினிமா பிரபலங்கள் என அனைவரும் தங்களது ஜனநாயக கடைமையை ஆற்றி வருகின்றனர்.
அசம்பாவிதங்கள் நிழாத வண்ணம் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு, அனைத்து வாக்குச்சாவடிகளில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், பெசன்ட் நகர் 13-வது மண்டலத்திற்கு உட்பட்ட 174 வது வார்டில் கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடும் 94 வயது வேட்பாளர் காமாட்சி தனது வாக்கினை பதிவு செய்துள்ளார்.