வரலாற்றில் முதல்முறையாக வாக்களித்த நரிக்குறவர் சமூகத்தினர்
tamilnadu
local-and-municipal-elections
By Nandhini
தமிழ்நாட்டில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 490 பேரூராட்சிகளில் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.
காலை 7 மணி முதலே தொடங்கப்பட்ட வாக்குப்பதிவில் மக்கள் அனைவரும் ஆர்வத்துடன் வந்து வாக்கு செலுத்தி வருகின்றனர்.
அரசியல் கட்சி தலைவர்கள், சினிமா பிரபலங்கள் என அனைவரும் தங்களது ஜனநாயக கடைமையை ஆற்றி வருகின்றனர்.
அசம்பாவிதங்கள் நிழாத வண்ணம் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு, அனைத்து வாக்குச்சாவடிகளில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட 20-வது வார்டில் வசித்து வரும் நரிக்குறவ மக்கள் சிலர் முதல் முறையாக வாக்குச்சாவடிக்கு வந்து வாக்கு செலுத்தி, தங்களுடைய ஜனநாயக கடமையை ஆற்றி வருகிறார்கள்.