30 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக வாக்களித்த ரஜினிகாந்த் ரசிகர்
தமிழகத்தில் உள்ள அனைத்து நகராட்சி மற்றும் பேரூராட்சிகளுக்கு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் இன்று காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது.
தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகளுக்கான தேர்தல் இன்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்று வருகிறது.
மக்கள் ஆர்வமுடன் தங்களுடைய வாக்குகளை பதிவு செய்து வருகிறார்கள். அசம்பாவிதங்கள் எதுவும் நடைபெறாத வண்ணம் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்தால்தான் வாக்களிப்பேன் என்று, ரஜினியின் தீவிர ரசிகர் மகேந்திரன் என்பவர் 30 ஆண்டுகளாக வாக்களிக்காமல் இருந்து வந்துள்ளார். இந்நிலையில், இன்று அவர் முதல்முறையாக தனது முதல் வாக்கினை பதிவு செய்துள்ளார்.