அதிமுக ஆட்சியில் நடத்தப்பட்ட கூட்டுறவு சங்கத் தேர்தல் ரத்து – சட்டப்பேரவையில் இன்று மசோதா தாக்கல்
அதிமுக ஆட்சியில் நடத்தப்பட்டட கூட்டுறவு சங்கத் தேர்தலை ரத்து செய்ய சட்டப்பேரவையில் இன்று மசோதா தாக்கல் செய்யப்பட இருக்கிறது. கடந்த 2018ம் ஆண்டு அதிமுக ஆட்சியில் நடைபெற்ற கூட்டுறவு சங்க தேர்தலை ரத்து செய்ய சட்டப்பேரவையில் இன்று மசோதா தாக்கல் செய்யப்பட இருக்கிறது.
இதனையடுத்து, சட்டப்பேரவையில் கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி இந்த மசோதாவை இன்று தாக்கல் செய்கிறார்.
2018ம் ஆண்டு நடந்த கூட்டுறவு சங்கத் தேர்தலில் தேர்வான நபர்களின் பதவிக்காலம் 2023ம் ஆண்டு வரை உள்ளது. இந்நிலையில், அதனை ரத்து செய்வதற்கான மசோதா இன்று தாக்கல் செய்யப்பட இருக்கிறது.
பல்வேறு மாவட்டங்களில் நகைக்கடன் வழங்கப்பட்டதில், கூட்டுறவு சங்கத் தேர்தலில் தேர்வான நபர்கள் மூலம் முறைகேடு நடந்திருப்பதாக எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையில், கூட்டுறவுச் சங்கத் தேர்தலை ரத்து செய்ய சட்டப்பேரவையில் இன்று மசோதா தாக்கல் செய்யப்பட இருக்கிறது.
கடந்த 2018ம் ஆண்டு நடந்த கூட்டுறவு சங்கத் தேர்தலில், தமிழகம் முழுவதும் சுமார் 20 ஆயிரம் பேர் தேர்வான நிலையில், இத்தேர்தலை ரத்து செய்வதற்கான மசோதா இன்று தாக்கல் செய்யப்பட இருக்கிறது.