தமிழக சட்டப்பேரவை தேர்தல்- பிற்பகல் 1 மணி நிலவரப்படி 39.61% வாக்குகள் பதிவு
தமிழக சட்டப்பேரவை தேர்தலில் பிற்பகல் 1 மணி நிலவரப்படி 39.61% வாக்குகள் பதிவாகியுள்ளது. சென்னை தலைமை செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த சத்ய பிரத சாஹூ பேசுகையில், தமிழக சட்டப்பேரவை தேர்தலில் பிற்பகல் 1 மணி நிலவரப்படி 39.61% வாக்குகள் பதிவாகியுள்ளது.
அதிகபட்சமாக விருதுநகர் மாவட்டத்தில் 41.79% வாக்குகள் பதிவாகியுள்ளது. குறைந்த பட்சமாக திருநெல்வேலியில் 32.29% வாக்குகள் பதிவாகியுள்ளது. சென்னையில் 37.16% வாக்குகள் பதிவாகியுள்ளது. இதுவரை வாக்குபதிவு மிகவும் சுமூகமான முறையில் சென்று கொண்டிருக்கிறது. சட்ட ஒழுங்கிற்கும் எந்தவித பாதிப்பும் இல்லாமல் தேர்தல் நடைபெற்று வருகிறது.
ஏற்கனவே மக்களுக்கு 6 மாதங்களாக தெரிவித்து வருகிறோம். பெயர் விடுபட்டிருந்தால் பெயரை சேர்ப்பதற்கு தாங்களாக முன்வர வேண்டும் என்றார்.