நீச்சல் குளத்தைப் பார்த்தவுடன் குழந்தை போல் ஓடி வந்த கும்பகோண ’மங்களம்’ யானை...!

Tamil nadu Viral Video Elephant Kumbakonam
By Nandhini Jan 25, 2023 11:59 AM GMT
Report

நீச்சல் குளத்தைப் பார்த்தவுடன் குழந்தையை போல் ஓடி வந்து குளியல் போட்ட கும்பகோண ’மங்களம்’ யானையின் வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

கும்பகோண 'மங்களம்' யானைக்கு நீச்சல் குளம்

கும்பகோணத்தில் பிரசித்தி பெற்ற ஆதிகும்பேஸ்வரர் கோவில் இருக்கிறது. இக்கோவிலில் ‘மங்களம்’ என்ற யானை கோவில் வளாகத்திலேயே பராமரிக்கப்பட்டு வருகிறது. கடந்த 1982ம் ஆண்டு ‘மங்களம்’ யானை, காஞ்சி மகாபெரியவரால் கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் கோவிலுக்கு வழங்கப்பட்டது.

தற்போது இந்த யானைக்கு 55 வயதாகிறது. இந்நிலையில், ‘மங்களம்’ யானை குளிப்பதற்காக கோவில் வளாகத்திலேயே ரூ.8 லட்சத்து 40 ஆயிரம் மதிப்பீட்டில் நீச்சல் குளம் அமைக்கப்பட்டுள்ளது.

உற்சாக குளியல் போடும் வீடியோ வைரல் மங்களம் யானை நடைப்பயிற்சி மேற்கொள்ள வசதியாக நீச்சல் குளத்தை சுற்றிலும் 500 மீட்டருக்கு 14 நவீன மின்விளக்குகள் ரூ.1 லட்சம் மதிப்பில் அ     மைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

இந்த நீச்சல் குளத்தை நேற்று முன்தினம் அமைச்சர் சேகர்பாபு திறந்து வைத்தார். குளத்தில் நிரப்பப்பட்ட தண்ணீரில் ‘மங்களம்’ யானை இறங்கி உற்சாக குளியல் போட்டது. இதனை அமைச்சர் ரசித்து பார்த்தார். தற்போது இது தொடர்பான வீடியோக்களும், புகைப்படங்களும் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.   

tamilnadu-kumbakonam-elephant-viral-video