மகாத்மா காந்தியின் 153-வது பிறந்தநாள் - காந்தி சிலைக்கு ஆளுநர், முதலமைச்சர் மரியாதை!
மகாத்மா காந்தியின் 153வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில், மகாத்மா காந்தியின் பிறந்த நாளையொட்டி இன்று பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்கள் என அனைத்துக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளன.
மகாத்மா காந்தியின் பிறந்தநாளையொட்டி சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு ஆளுநர் ஆர்.என். ரவி மற்றும் முதலமைச்சர் மு. க.ஸ்டாலின் ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள். இதனையடுத்து, மகாத்மா காந்தியின் பிறந்த நாளையொட்டி அவரது திருப்புகழ் பாடும் வண்ணம் நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
டெல்லி ராஜ்காட்டிலுள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் பிரதமர் நரேந்திர மோடி மலர்த்தூவி மரியாதை செலுத்தினார். அதேபோல் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோர் காந்தி நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.