தமிழகம் வருகிறார் துணை அதிபர் கமலா ஹாரிஸ்?
tamilnadu-kamala-harish-news
By Nandhini
சில நாட்களுக்கு முன்பு அமெரிக்கா சென்ற பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் ஜோ பைடன், துணை அதிபர் கமலா ஹாரிஸ் ஆகியோரை சந்தித்து கலந்துரையாடினார்.
அப்போது, இந்தியாவுக்கு வரும்படி இருவருக்கும் அழைப்பு விடுத்தார் பிரதமர் மோடி. இதை ஏற்றுக் கொண்ட கமலா ஹாரிஸ், விரைவில் இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொள்ள இருக்கிறார்.
அடுத்த ஆண்டு அவர் இந்தியாவுக்கு வரும்போது, தமிழகத்திற்கும் வருவார் என கூறப்படுகிறது. தன் பூர்வீக கிராமத்திற்கும் கமலா வருகை தர இருக்கிறார். இது தொடர்பான பூர்வாங்க வேலைகள் துவங்கி உள்ளன. மிகப் பெரிய அளவில் கமலாவுக்கு தமிழகத்தில் வரவேற்பு அளிக்கப்பட இருக்கிறது.
