தமிழகத்தில் ஹிட்லரின் வாரிசுகள் உள்ளனர் :கமல் ஹாசன் பரபரப்பு பதிவு
'தமிழகத்திலும் ஹிட்லர் வாரிசுகள் உள்ளனர்' என, மக்கள் நீதி மையம் தலைவர் கமல் கூறியுள்ளார். மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிறுவனரான கமல் ஹாசன் தந்து ட்விட்டர் பதிவில் பரபரப்பாக ஒரு பதிவு ஒன்றை போட்டுள்ளார். அதில் அவர் தெரிவித்த தாவது, அவரது டுவிட்டர் பதிவு:'ஒரு மேடைப்பேச்சு, ஆயிரம் கட்டுரைகளுக்கு சமம். ஒரு அடி தடி கலவரம், ஆயிரம் மேடைப் பேச்சுகளுக்கு சமம்' என்கிறார் ஹிட்லர்.
இங்கும் ஹிட்லர் வாரிசுகள் உண்டு.
தேர்தல் சமயத்தில் எப்படியாவது, பிற மதத்தவர்களின் உணர்ச்சிகளை துாண்டி,மதக் கலவரங்களை உருவாக்கி, ஓட்டுகளை அறுவடை செய்யும் முயற்சிகள், இங்கும் நிகழ்கின்றன.சமத்துவமும், சமூகநீதியும் பேசும் தமிழகத்தில், உங்கள் சதித்திட்டங்கள், என் மக்களின் சகோதரத்துவத்தால் என்றென்றும் முறியடிக்கப்படும் மூடர்களே.இவ்வாறு, கமல் கூறியுள்ளார்.