கி.வீரமணியின் 89-வது பிறந்தநாள் – நேரில் சென்று வாழ்த்து தெரிவித்த தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

stalin tamilnadu- k--veeramani- birthday-wishes
By Nandhini Dec 02, 2021 05:01 AM GMT
Report

திராவிட கழக தலைவர் கி.வீரமணி பிறந்த நாளான இன்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.

திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தனது 89-வது பிறந்தநாள் இன்று கொண்டாடி வருகிறார்.

அவரது பிறந்தநாளை முன்னிட்டு பல்வேறு அரசியல் தலைவர்களும், பிரபலங்களும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி பிறந்த நாளான இன்று அடையாரில் உள்ள அவரது இல்லத்துக்கு நேரில் சென்று வாழ்த்து தெரிவித்தார். முதல்வருடன் துரைமுருகன் மற்றும் கே.என். நேரு உள்ளிட்ட அமைச்சர்களும் நேரில் சென்று வாழ்த்து தெரிவித்தனர். 

கி.வீரமணியின் 89-வது பிறந்தநாள் – நேரில் சென்று வாழ்த்து தெரிவித்த தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் | Tamilnadu K Veeramani Stalin Birthday Wishes