சசிகலா வருகை - பூக்களால் அழகாக அலங்கரிக்கப்பட்ட ஜெயலலிதா, எம்ஜிஆர் நினைவிடம்
அதிமுக கட்சி தொடங்கப்பட்டு நாளையுடன் 50 ஆண்டுகள் நிறைவடைகிறது. இதன் காரணமாக இந்த ஆண்டு பொன்விழா ஆண்டாக அதிமுகவினரால் கொண்டாடப்படும் உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் அதிமுக தலைமை மூலம் செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், இன்று காலை 10 மணி முதல் 12 மணிக்குள்ளாக மெரினா கடற்கரையில் அமைந்துள்ள மறைந்த முன்னாள் முதல்வர்கள் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, அண்ணா நினைவிடங்களுக்கு அதிமுக பொதுச்செயலாளர் வி.கே.சசிகலா சென்று மலர்த்தூவி மரியாதை செலுத்த வருகிறார்.
இதனால், ஜெயலலிதா மற்றும் எம்.ஜி.ஆர் நினைவிடங்கள் மலர்களால் பிரமாண்டமாக அலங்கரிக்கப்பட்டிருகின்றன. மேலும், இன்றும், நாளையும் அதிமுக கட்சித் தலைவர்கள் வருகை தருவதால் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
வண்ணமயமாக அலங்கரிக்கப்பட்ட புகைப்படங்கள் இதோ -


