கோவையில் முதலீட்டாளர்கள் மாநாடு: 82 திட்டங்கள் மூலம் 92,420 நபர்களுக்கு வேலைவாய்ப்பு

meeting tamilnadu kovai investor
By Irumporai Nov 23, 2021 09:20 AM GMT
Report

தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் தலைமையில் தொழில் துறை சார்பில் முதலீட்டாளர்களின் முதல் முகவரி தமிழ்நாடு என்ற முதலீட்டாளர்கள் மாநாடு இன்று கோயம்புத்தூர் கொடிசியா வளாகத்தில் சிறப்புற நடைபெற்றது.

மாநாட்டில் 82 திட்டங்கள் :

கோவையில் நடைபெற்ற இந்த மாநாட்டின் மூலமாக மொத்தம் 82 திட்டங்களின் மூலம் 52,549 கோடி ரூபாய் முதலீட்டில் 92,420 நபர்களுக்கு வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன.

இந்த நிகழ்ச்சியில் 34 ஆயிரத்து 723 கோடி ரூபாய் முதலீட்டில் 74 ஆயிரத்து 835 நபர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில் 52 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் தமிழக முதலமைச்சர் முன்னிலையில் மேற்கொள்ளப்பட்டன.

காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, தர்மபுரி ,கிருஷ்ணகிரி, நாமக்கல், சேலம், திருச்சி ,புதுக்கோட்டை, கரூர், ஈரோடு ,கோயம்புத்தூர், திருப்பூர் ,மதுரை, திண்டுக்கல், விருதுநகர், தூத்துக்குடி ,திருநெல்வேலி ஆகிய 22 மாவட்டங்களில் முதலீடுகள் பரவலாக மேற்கொள்ளப்பட உள்ளன

2021 -22 ம் ஆண்டிற்கான திருத்த வரவு செலவுத் திட்ட உரையில் அறிவித்தவாறு தமிழக முதல்வர் நிதி துறை வளர்ச்சிக்கு ஏதுவாகவும் மேம்பட்ட நிதி நிறுவனங்களின் முதலீடுகளை ஈர்க்கும் வகையிலும் தமிழ்நாடு நிதிநுட்ப கொள்கை 2021ஐ வெளியிட்டார்

மேலும் சென்னையின் நிதி நுட்பக் கழகம் இரண்டாம் மற்றும் மூன்றாம் அடுக்கு நகரங்களில் நியோ டைடல் தொழில்நுட்ப பூங்காக்கள் அமைத்தல் போன்ற பல சிறப்பம்சங்கள் இக்கொள்கையை இடம்பெற்றுள்ளன. அத்துடன் மேம்படுத்தப்பட்ட ஒற்றை சாளர இணையதளம் 2.O கைபேசி சேவையை துவக்கி வைத்தார்.

முதல்வர் முக ஸ்டாலின் தற்போது உள்ள முதலீட்டாளர்களுக்கு மட்டுமின்றி புதிய முதலீட்டாளர்களுக்கும் உதவிடும் வகையில் கைபேசி செயலியில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

விண்ணப்பங்கள் மேற்கொள்ளுதல் ,அனுமதிகள் பற்றிய தகவல்கள், அனுமதிகளின் நிலைதனை கண்காணித்தல், தெளிவுகள் ,சந்தேகங்கள் எழுப்புதல் போன்ற சிறப்பு அம்சங்கள் இந்த செயலியில் இடம்பெற்றுள்ளன.