தமிழகத்தில் நாளை பள்ளிகள் திறப்பு: தயார் நிலையில் 30 லட்சம் மாத்திரைகள்
தமிழகத்தில் சுமார் 9 மாதங்களுக்கு பின்னர் நாளை 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படவுள்ளது. இந்நிலையில் மாணவர்களுக்கு வழங்க சுமார் 30 லட்சம் வைட்டமின் மாத்திரைகள் தயார் நிலையில் இருப்பதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
ஈரோட்டில் கொண்டாடப்பட்ட காளிங்கராயன் தினவிழாவில் கலந்து கொண்டு பேசிய போதே இதனை தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், தமிழகத்தில் நாளை பள்ளிகள் திறக்கப்படவுள்ளதால் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் இணை இயக்குனர் தலைமையிலான குழுவினர் கண்காணிப்பு பணியில் ஈடுபடுவார்கள்.
30 லட்சம் வைட்டமின் மாத்திரைகள், பள்ளி மாணவர்களுக்கு வழங்குவதற்கு தயார் நிலையில் இருக்கிறது என தெரிவித்தார். மேலும் சட்டமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன், பொதுத் தேர்வுக்கான தேதி அறிவிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.