தமிழகத்தில் 10, 12ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு
tamilnadu school start
By Jon
ஜனவரி 19-ஆம் தேதி முதல் 10 மற்றும் 12-ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்படும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி அறிவித்துள்ளார்.
கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் கடந்த 10 மாதங்களாகவே பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. இந்நிலையில் மாணவ, மாணவிகளுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடைபெற்று வரும் நிலையில், பள்ளிகள் திறப்பது குறித்து முடிவு செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டது.
சமீபத்தில் நடந்த பெற்றோர் கருத்து கேட்பு கூட்டத்தில் 70 சதவிகித பெற்றோர்கள் பள்ளிகளை திறப்பதற்கு ஆதரவு தெரிவித்தனர்.
இந்நிலையில் 19ம் தேதி முதல் 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்படும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.