நான் பிரதமராக வந்தால் முதலில் இதைத்தான் செய்வேன் – ராகுல் காந்தி

tamilnadu-india
By Nandhini Nov 07, 2021 09:20 AM GMT
Report

நான் பிரதமராக வந்தால், முதலில் பெண்களுக்கு இட ஒதுக்கீடு அளிப்பேன் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி, கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த ஒரு தனியார் பள்ளியில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நேற்று மாணவர்களுக்கு இரவு விருந்து கொடுத்தார்.

அப்போது அவர்களுக்குள் நடந்த உரையாடல் குறித்த வீடியோவை ராகுல் காந்தி, தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டார்.

அந்த பதிவில், மாணவர்கள் ராகுல் காந்தியிடம் நீங்கள் பிரதமரானால் என்ன உத்தரவை முதலில் பிறப்பிப்பீர்கள் என்று கேள்வி கேட்டனர். அதற்கு ராகுல்காந்தி பெண்களுக்கு இட ஒதுக்கீடு அளிப்பேன் என்று கூறினார். பின் உங்கள் குழந்தைகளுக்கு என்ன கற்றுக் கொடுப்பீர்கள் என்ற கேள்விக்கு பதிலளித்த ராகுல்காந்தி, பணிவை கற்றுக் கொடுப்பேன். அதன் மூலம் கிடைக்கும் என்றார். மேலும், இந்நிகழ்வில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி கலந்து கொண்டு மாணவர்களுடன் உரையாடினார்.