டெல்லியில் தமிழ்நாடு இல்லத்தில் தீ விபத்து
டெல்லியில் தமிழக முதலமைச்சர் விஜய் தங்கியிருந்த தமிழ்நாடு அரசு இல்லத்தில் தீ விபத்து ஏற்பட்டதால் பரபரப்பானது.
நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக நேற்று தமிழக முதலமைச்சர் விஜய் டெல்லி சென்றார், நிதி ஆயோக் கவுன்சிலின் 11வது கூட்டம் டெல்லி ஜனாதிபதி மாளிகை வளாகத்தில் உள்ள கலாசார மையத்தில் இன்று நடைபெறுகிறது.
சோனியாகாந்தியுடன் சந்திப்பு
பிரதமர் மோடி தலைமை தாங்கும் இந்நிகழ்ச்சியில் அனைத்து மாநில முதலமைச்சர்களும் கலந்து கொள்கிறார்கள், இதற்காக நேற்று டெல்லி சென்ற முதலமைச்சர் விஜய் சோனியா காந்தி, ராகுல் காந்தியை சந்தித்தார், தொடர்ந்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பொதுச்செயலாளர் டி.ராஜாவை சந்தித்தார்.

தமிழ்நாடு இல்லத்தில் தீ விபத்து
இந்நிலையில் இன்று தமிழ்நாடு இல்லத்தில் அனைவரும் சாப்பிட்டுக்கொண்டிருந்த போது திடீரென தீ விபத்து ஏற்பட்டது, புகைமூட்டம் ஏற்பட்டதை தொடர்ந்து அங்கிருந்த காவலர்கள் அனைவரையும் பத்திரமாக வெளியேற்றினர், விஜய் புறப்பட்ட சில நிமிடங்களில் இந்த விபத்து ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
