69% இட ஒதுக்கீடு வழக்கை வேறு எந்த வழக்குடனும் சேர்த்து விசாரிக்கக்கூடாது: தமிழக அரசு!

government cheenai judgement
By Jon Feb 08, 2021 04:58 PM GMT
Report

69 சதவிகித இட ஒதுக்கீடு முறைக்கு எதிரான வழக்குகளை வேறு வழக்குடன் சேர்த்து விசாரிக்கக் கூடாது என உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மனு தாக்கல் செய்துள்ளது. 69 சதவிகித இட ஒதுக்கீடு முறை பின்பற்றப்படுவது இந்தியாவிலேயே தமிழகத்தில் மட்டும்தான் பின்பற்றபடுகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கொடுக்கப்பட்ட வழக்குகளை எந்த வழக்குடன் சேர்க்காமல் விசாரிக்கக் கூடாது என தமிழக அரசு திட்டவட்டமாக கூறியுள்ளது.

முன்னதாக மராத்தா இட ஒதுக்கீடு வழக்கை விசாரித்து வரும் அரசியல் சாசன அமர்வுடன் 69 சதவிகித இட ஒதுக்கீடு முறைக்கு எதிரான வழக்குகளையும் விசாரிக்க வேண்டும் என மனுதாரர்கள் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்த மனு மீது தமிழக அரசு பதில் அளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில் தமிழக அரசு தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்தியுள்ளது.