பிபின் ராவத் மனைவி மதுலிக்கா ராவத் உயிரிழந்தாரா? வெளியான தகவல்
குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில், பயணம் செய்த 14 பேரில் 11 பேர் சடலமாக மீட்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த விபத்தில் முப்படை தளபதி பிபின் ராவத்தின் மனைவி மதுலிக்கா ராவத்தும் உயிரிழந்ததாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
இந்திய முப்படைகளின் தளபதி பிபின் ராவத், அவரது மனைவி உள்ளிட்ட 14 ராணுவ உயரதிகாரிகள் உயர் ரக ராணுவ ஹெலிகாப்டரில் வெலிங்டன் பயிற்சி மையத்திற்கு சென்றுள்ளனர். அப்போது, குன்னூர் அருகே வானில் பறந்து போது, பனி மூட்டம் காரணமாக சுமார் 12.20 மணியளவில் ஹெலிகாப்டர் திடீரென கீழே விழுந்து வெடித்து சிதறியது.
இந்த விபத்து, அரசின் எஸ்டேட் பகுதியில் நடந்துள்ளது. சுமார் ஒன்றரை மணிநேரம் தீ பற்றி எரிந்து கொண்டிருந்தது. விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணி துரிதமாக நடைபெற்று வந்தது. விபத்தில் சிக்கிய 14 பேரில் 11 பேரை இதுவரை சடலமாக மீட்கப்பட்டிருக்கிறார்கள். முப்படை தளபதி பிபின் ராவத்துக்கு கோவை ராணுவ மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மீட்கப்பட்ட உடல்கள் அடையாளம் காண முடியாத அளவிற்கு கடுமையாக தீக்காயமடைந்திருப்பதாக நீலகிரி மாவட்ட ஆட்சியர் அம்ரித் தகவல் தெரிவித்திருக்கிறார்.
இந்நிலையில், இந்த விபத்தில் முப்படை தளபதி பிபின் ராவத்தின் மனைவி மதுலிக்கா ராவத்தும் உயிரிழந்திருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. ஆனால, இது குறித்து இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாக வில்லை. இந்த விபத்து குறித்து விசாரணை மேற்கொள்ள ராணுவம் உத்தரவிட்டிருக்கிறது.