குன்னூர் ஹெலிகாப்டர் விபத்து : மதியம் முதல் நடந்தது என்ன? - விரிவான ஒரு பார்வை

tamilnadu-helicopter-crash--what-happened
By Nandhini Dec 08, 2021 12:24 PM GMT
Report

குன்னூர் அருகே காட்டேரி மலைப்பகுதியில் திடீரென ராணுவ ஹெலிகாப்டர் கீழே விழுந்து வெடித்து சிதறி விபத்துக்குள்ளானது. இந்த விபத்து, கோவை சூலூர் விமானப்படை தளத்திலிருந்து குன்னூர் வெலிங்டன் பயிற்சி மையத்திற்கு சென்றபோது நடைபெற்றுள்ளது.

இந்த விபத்து குறித்து விரிவாக பார்ப்போம்

காலை 11.45 மணிக்கு :

Mi-17V5 ரக ஹெலிகாப்டரில் கோவை சூலூர் விமானப்படை தளத்திலிருந்து குன்னூர் வெலிங்க்டன் பயிற்சி மையத்திற்கு ராணுவ ஹெலிகாப்டர் புறப்பட்டுச் சென்றது.

நண்பகல் 12.20 மணிக்கு : 

ஹெலிகாப்டர் நஞ்சப்ப சத்திரம், காட்டேரி அருகே வந்த போது விபத்து நடைபெற்றுள்ளது. முப்படைத்தளபதி மற்றும் அவரது மனைவி இந்த ஹெலிகாப்டரில் பயணம் செய்ததாக தகவல்கள் வெளியானது.

பிற்பகல் 1 மணிக்கு :

பயணித்தவர்களில் 4 பேர் உடல்கள் அடையாளமே காண முடியாத அளவிற்கு தீயில் கருகிய நிலையில் கண்டெடுக்கப்பட்டது. இதில், 3 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டார்கள்.

மதியம் 2 மணிக்கு :

ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான பகுதியில் மீட்பு பணிகள் விரைந்து மேற்கொள்ளப்பட்டது.

மதியம் 2.15 மணிக்கு :

ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் பலி எண்ணிக்கை 7-ஆக உயர்ந்தது.

மதியம் 2.20 மணிக்கு :

விபத்துக்குள்ளான ராணுவ ஹெலிகாப்டர் குறித்து மத்திய அமைச்சரவை அவசர ஆலோசனை நடைபெற்றது. ஹெலிகாப்டர் விபத்து மீட்புப்பணிகளை துரிதப்படுத்த தமிழக முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டார்.

மதியம் 2.30 மணிக்கு :

மீட்புப்பணிகள் குறித்து நேரில் ஆய்வு செய்ய தமிழக முதலமைச்சர் தனி விமானம் மூலம் கோவை செல்வதாக தகவல்கள் வெளியானது.

மதியம் 3 மணிக்கு :

தரையிறங்க 5 நிமிடங்களே எஞ்சியிருந்த நிலையில் விழுந்து ஹெலிகாப்டர் நொறுங்கியதாக தகவல்கள் வெளியானது.

மதியம் 3.10 மணிக்கு :

விபத்து குறித்து அறிக்கை தாக்கல் செய்யக் கோரி அமைச்சர் ராஜ்நாத் சிங் உத்தரவிட்டார். நாடாளுமன்றத்திற்கு ராஜ்நாத் சிங் வருகை தந்தார்.

மாலை 4.50 மணிக்கு :

ஹெலிகாப்டரில் பயணம் செய்த 14 பேரில் 13 உயிரிழந்து விட்டதாகவும், ஏ.என்.ஐ பரிசோதனை மேற்கொள்ளப்பட இருப்பதாகவும் தகவல்கள் வெளியாயின.

மாலை 5.10 மணிக்கு :

பாதுகாப்புக்கான அமைச்சரவைக்கூட்டம் மாலை 6.30 மணிக்கு நடைபெற இருப்பதாக அறிவிப்பு வெளியானது.