ஹெலிகாப்டர் விபத்து - கோமா நிலையில் உள்ள ராணுவ அதிகாரிக்கு 3 ஆபரேஷன்

tamilnadu-helicopter-crash
By Nandhini Dec 09, 2021 05:17 AM GMT
Report

ராணுவ ஹெலிகாப்டர் நடந்த விபத்தில் சிக்கிய ராணுவ அதிகாரி கோமா நிலையில் உள்ளார். அவருக்கு தற்போது 3 ஆபரேஷன் நடந்துள்ளது என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

குன்னுாரில் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த, ராணுவ அதிகாரிகள் உடல்கள் ராணுவ மருத்துவமனையில் நேற்று பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. அந்த மருத்துவமனையில், ராணுவ பயிற்சி கல்லுாரி அதிகாரிகள் மற்றும் மெட்ராஸ் ரெஜிமென்ட் சென்டரின் ராணுவ வீரர்கள் முழு பாதுகாப்பில் ஈடுபட்டிருக்கிறார்கள்.

இதனால், ராணுவ பகுதிகளில் மற்ற வாகனங்கள் செல்வதற்கு அனுமதி கொடுக்கப்படவில்லை. அந்தப் பகுதி முழுவதும் தடை செய்யப்பட்டிருக்கிறது. அந்த இடத்திற்கு ராணுவ அமைச்சர் ராஜ்நாத்சிங் வர இருக்கிறார்.

அவர் வந்த பிறகு இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்திய பின், முழு விபரங்களை தெரிவிக்க முடியும் என்று ராணுவ வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.

கோமா நிலையில் உள்ள ராணுவ அதிகாரிக்கு, 3 ஆபரேஷன் நடந்துள்ளது. இது நள்ளிரவிலும் தொடரும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. 

ஹெலிகாப்டர் விபத்து - கோமா நிலையில் உள்ள ராணுவ அதிகாரிக்கு 3 ஆபரேஷன் | Tamilnadu Helicopter Crash