ஹெலிகாப்டர் விபத்து - பிளாஸ்டிக் குடத்தில் நீரை நிரப்பி தீயை அணைத்த காட்டேரி கிராம மக்கள் - வீடியோ வைரல்

tamilnadu-helicopter-crash
By Nandhini Dec 08, 2021 12:46 PM GMT
Report

குன்னூர் காட்டேரி என்ற இடத்தில் ராணுவ ஹெலிகாப்டர் கீழே விழுந்து வெடித்து சிதறி கொழுந்து விட்டு எரிந்தது. இதை அறிந்த அக்கிராம மக்கள் நேரடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று நெருப்பை அணைக்க முயற்சி செய்திருக்கிறார்கள்.

நீலகிரி மாவட்டம், குன்னூர், காட்டேரி மலைப் பகுதியில் ராணுவ ஹெலிகாப்டர் கீழே விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 13 பேர் உயிரிழந்துள்ளதாக நீலகிரி ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், இந்த விபத்து நடைபெற்ற இடத்தில் தண்ணீர் இல்லாததால் ஆரம்பக்கட்ட சிக்கல் ஏற்பட்டது. உடனே இதை அறிந்த கிராம மக்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைக்க முயற்சி செய்துள்ளனர்.

விபத்து நடந்த இடத்தில் அருகில் தண்ணீர் எதுவும் கிடைக்காததால், பிளாஸ்டிக் குடங்களில் நீர் பிடித்து நெருப்பை அணைத்திருக்கிறார்கள் அக்கிராம மக்கள். ஹெலிகாப்டரில் இருந்தவர்கள் உயிரோடு இருக்கிறார்களா, இல்லையா என்ற நிலை எதுவும் தெரியாத கிடைத்த தண்ணீரை கொண்டு அவர்கள் தீயை அணைக்க முயற்சி செய்து மீட்டுள்ளனர்.

அக்கிராம மக்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில், அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்நிலையில், விபத்து நடந்த இடத்தில் தீயை அணைக்கும் காட்சிகளும், உயிருக்கு போராடியவர்களை மீட்கும் காட்சிகளும் தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.