விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை

School Heavy Rain Leaves
By Thahir Nov 11, 2021 03:29 PM GMT
Report

கனமழை காரணமாக விழுப்புரம், கடலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

தொடர் மழை காரணமாக ஏற்கெனவே சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர் கனமழை காரணமாகப் பல இடங்களில் தேங்கியுள்ள மழை நீர் முழுமையாக வடியாததால் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.

இதனால் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு மாவட்ட நிர்வாகம் நாளையும் விடுமுறை அறிவித்துள்ளது.

அதேபோல், நாளை கடலூர், விழுப்புரம், ராணிப்பேட்டை மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதவிர வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.