"உங்கள் தியாகம் விலைமதிப்பில்லாதது; தலைவணங்குகிறேன்" - முதலமைச்சர் ஸ்டாலின்

rain heavy tamilnadu mk stalin
By Thahir Nov 11, 2021 03:42 PM GMT
Report

தமிழ்நாட்டில் இயல்புநிலை முழுமையாக திரும்ப அனைவரும் சேர்ந்து உழைப்போம், மக்களைக் காப்போம் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார்.

கடந்த சில நாட்களாக சென்னையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதல்வர் ஸ்டாலின் நேரில்சென்று பார்வையிட்டார்.

அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ''தொடர் மழை - அளவுக்கதிகமான நீர்வரத்து காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ள நிலையில்,

அவர்களது துயர்துடைக்கப் பணியாற்றும் காவல்துறையினர், மின்துறையினர், தூய்மைப் பணியாளர்கள், மருத்துவத்துறையினர் உள்ளிட்ட நிவாரணப் பணியில் ஈடுபட்டுள்ள அனைவரது சேவைக்கும் தலைவணங்குகிறேன்.

தன்னலம் பாராத உங்களது சேவையாலும் தியாகத்தாலும் கோடிக்கணக்கான மக்களின் துயர் துடைக்கப்படுகிறது.

இயல்பு நிலை முழுமையாக விரைந்து திரும்ப அனைவரும் சேர்ந்து உழைப்போம்! மக்களைக் காப்போம்! உங்கள் தியாகம் விலைமதிப்பில்லாதது! உங்கள் சேவை மகத்தானது! உங்கள் உள்ளத்துக்கு எனது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்! '' என்று கூறியுள்ளார்.