சூறைக்காற்று எச்சரிக்கை.. தமிழகத்தில் இந்த 6 மாவட்டங்களில் கனமழை அலெர்ட்!

Tamil nadu
By Irumporai Nov 21, 2022 01:56 AM GMT
Report

வங்கக்கடலில் நிலைப்பெற்றுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக இன்று தமிழகத்தில் 6 மாவட்டங்களில் இன்று கன மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வானிலை ஆய்வு மையம் தகவல்  

வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள தகவலின் படி தென்மேற்கு வங்கக் கடலில் இலங்கைக்கு தென்கிழக்கே சுமார் 540 கிலோமீட்டர் தொலைவில் மையம் கொண்ட காற்றழுத்த தாழ்வு நிலைக் காரணமாக 24 மணி நேரத்தில் வடதமிழகம், தெற்கு ஆந்திர கடலோர பகுதிகள் நோக்கி நகரக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சூறைக்காற்று எச்சரிக்கை.. தமிழகத்தில் இந்த 6 மாவட்டங்களில் கனமழை அலெர்ட்! | Tamilnadu Heavy Rain Cheenai

இதன் காரணமாக, இன்று தென்தமிழகத்தின் ஓரிரு இடங்களில் மிதமான மழையும், விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டையில் கனமழை பெய்யும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.

கடலோரா பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு 

நாளை திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும். தமிழ்நாடு-புதுச்சேரி கடலோர பகுதிகள், தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதையொட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறைக்காற்று வீசும் என்பதால் மீனவர்கள் அங்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.