நெரிசலில் சிக்கிய ஆம்புலன்ஸ்களுக்கு வழி ஏற்படுத்திக் கொடுத்த வங்கி மேலாளர் - குவியும் வாழ்த்துக்கள்
கன மழையால் ஏற்பட்டபோது, போக்குவரத்து நெரிசலில் சிக்கிய ஆம்புலனஸ்கள் செல்ல வழிவகை செய்த வங்கி மேலாளரை சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் நேரில் அழைத்து பாராட்டு தெரிவித்துள்ளார்.
கடந்த மாதம் 30ம் தேதி கனமழை சென்னையை வெளுத்து வாங்கியது. அப்போது, சென்னை அண்ணா சாலையில் 3 ஆம்புலன்ஸ் வாகனங்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கிக்கொண்டது.
அப்போது, இருசக்கர வாகனத்தில் சென்ற முகமதுஅலி ஜின்னா என்பவர் தனது வாகனத்தை ஓரமாக நிறுத்திவிட்டு ஆம்புலன்ஸ் வாகனங்களுக்கு முன்னால் இருந்த வாகனங்களை சிறிது சிறிதாக நகரச் செய்து அவர் நெடுந்தூரம் நடந்தே சென்று ஆம்புலன்களுக்கு போக்குவரத்து நெரிசலிலும் பாதை ஏற்படுத்திக் கொடுத்தார்.
தனியார் வங்கி ஒன்றில் மேலாளராக பணியாற்றும் முகமதுஅலி ஜின்னாவை சென்னை பெருநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் நேரில் அழைத்து அவரது சேவையை பாராட்டி வெகுமதி கொடுத்தார்.
மத்திய குற்றப்பிரிவில் கடந்த ஆண்டு சிறப்பாக பணிபுரிந்த காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்களுக்கு வெகுமதிகள் வழங்கி சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் பாராட்டினார்.