கனமழை எதிரொலி - 9 மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை

heavy rain school leave 9 district
By Anupriyamkumaresan Nov 02, 2021 04:37 AM GMT
Anupriyamkumaresan

Anupriyamkumaresan

in தமிழ்நாடு
Report

தமிழகத்தில் ஆங்காங்கே கனமழை தொடர்வதால் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம், அரியலூர், பெரம்பலூர், மயிலாடுதுறை, திருவண்ணாமலை ஆகிய 9 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை மாவட்டத்தில் கல்லூரிகளுக்கும் விடுமுறை விடப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

கனமழை எதிரொலி - 9 மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை | Tamilnadu Heavy Rain 9 District School Leave

இதற்கிடையே, டெல்டா மாவட்டங்கள் மற்றும் கடலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், கன்னியாகுமரி மாவட்டங்களில் இன்று இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கடலோர மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.